பார்களை மூடுங்கள் : உயர்நீதிமன்றம் காட்டம்!
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றுள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
ALSO READ | மக்களுக்கு இப்போதாவது விடிவுகாலத்தை தாருங்கள் - தங்கர் பச்சான் வேதனை!
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற (Chennai High court) நீதிபதி சரவணன், பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு (Tamilnadu State) மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த இந்த சட்டம் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பார்களில் மதுபானம் அருந்திய நபர்களை பொது இடங்களில் நடமாட அனுமதிப்பது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி, டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | விருதுநகரில் 10ஆவது மட்டுமே படித்த டாக்டர் - கைது செய்த போலீஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR