நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது - உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 04:22 PM IST
  • கொரோனா அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
  • இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது - உயர்நீதிமன்றம்!  title=

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்,  கொரோனா 3-வது அலை (Corona 3rd Wave) தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர் நக்கீரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.  மேலும், இதே கோரிக்கையுடன் டாக்டர் பாண்டியராஜ் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். 

ALSO READ | மாஜி முதல்வர் பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

இந்த வழக்குகள் அனைத்தும் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.கேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, 5 மாநில சட்டசபை தேர்தலே (5 State Elections) நடைபெறும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தது.  அதோடு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைப்பதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறினர். 

Voting Underway in Second Phase of Tamil Nadu Local Body Polls

மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிற போது, அதை மீறி உத்தரவைப் பிறப்பிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்றும் கூறினர்.  தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் வகுத்திருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், கொரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தலாம் என்றும் தீர்ப்பு வழங்கி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். 

Tamil Nadu Local Body Election Results 2021: DMK emerges victorious, AIADMK  distant second across 9 districts

அதேசமயம், உச்ச நீதிமன்றத்தை நாடுவது தான் மனுதாரருக்கு சிறந்த தீர்வாக அமையும் என்று கருத்த தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர்கள் ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை என்ற கேள்வியையும் எழும்பினர்.  மேலும், மூன்று பேருக்கு மேல் வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க செல்லக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்ற அரசின் நிலைப்பாடு பாராட்டிற்குரியது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

கொரோனா தடுப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உறுதி செய்ய வேண்டும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றபடுகிறதா அல்லது மீறப்படுகிறதா என்பது குறித்து நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரலாம் என்றும் கூறினர். அதோடு, தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பத்து நாட்கள் கழித்து வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் கூறி இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ASLO READ | அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும்: அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News