விருதுநகரில் 10ஆவது மட்டுமே படித்த டாக்டர் - கைது செய்த போலீஸ்

சுப்பல் மிர்தா என்ற வட இந்திய நபர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவம் செய்து வந்தார்

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Feb 4, 2022, 12:48 PM IST
  • விருதுநகரில் போலி டாக்டர் கைது.
  • பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் செய்ததாக புகார்.
  • காவல்துறையினர் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
விருதுநகரில் 10ஆவது மட்டுமே படித்த டாக்டர் - கைது செய்த போலீஸ் title=

விருதுநகரில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவமனை நடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போலி மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் (Virudhunagar) வேலுச்சாமி நகரை சேர்ந்தவர் சுப்பல் மிர்தா. இவருக்கு வயது 48. இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விருதுநகரில் வசித்து வருகிறார். 

சுப்பல்மிர்தா விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சுப்பல் மிர்தா 10ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் செய்வதாக புகார் எழுந்தது.

ALSO READ | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 699 மூத்த அதிகாரிகள் நியமனம்!

இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுப்பல் மிர்தா மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுப்பல் மிர்தா 10ம் வகுப்பு வரை படித்து விட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் அளித்த புகாரில் பேரில் விருதுநகர் மேற்கு காவல்துறையினர் (TN Police) சுப்பல் மிர்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்

ALSO READ | பொல்லாதவன் பட பாணியில் ஆட்டோ திருட்டு! லாபகரமாக பிடித்த போலீஸ்!

ALSO READ | தம்பியைக் கொன்ற சகோதரர்கள்! குடும்பத் தகராறில் கொடூரக் கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News