சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலே "பாஸ்" ஆனதாக தமிழக அரசு (TN Govt) அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவ-மாணவிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் (K. P. Anbalagan) அறிவித்துள்ளார். மேலும் இறுதி பருவத்தேர்வு எப்பொழுது, எங்கு நடைபெறும் என்பது குறித்து அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனக்கூறியுள்ளார்.


அதுமட்டுமில்லாமல், இறுதியாண்டு தேர்வுகளை மாணவ-மாணவிகள் நேரில் வந்து எழுத வேண்டியிருக்கும். இதற்காக மாணவ - மாணவிகள் தங்களை தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ளுங்கள் எனவும் கூறினார். பி.ஆர்க் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 7 ஆம் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.


ALSO READ | BE மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் பாஸ்: அரசு அதிரடி


முன்னதாக செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி கால தேர்வுகளை நடத்த கட்டாயப்படுத்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (UGC) சுற்றறிக்கையை எதிர்த்து போடப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தமான தனது உத்தரவில், "COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இறுதி ஆண்டு பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தாமல் எந்த மாநில அரசும், பல்கலைக்கழகங்களும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்ச்சியை அளிக்க கூடாது என்றும், பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் (Supreme Court) ஆகஸ்ட் 18 அன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.