திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேன் குளவி கலைந்து விரட்டி விரட்டி கொட்டியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேன் குளவி கொட்டியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். 62 வயது முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிவன் கோவில் பின்புறம் உள்ள அடர்ந்த மரங்கள் பகுதியில் இருந்த தேன் கூடு கலைந்தது. அதனால் தேன் கூண்டில் இருந்த குளவிகள் தன்னிச்சையாக வெளியே வந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள், ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்பவர்கள் மற்றும் சிவன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை தேன் குளவி விரட்டி விரட்டி கடித்துள்ளது.



இதில் சிவன் கோயில் அருகே படுத்துக்கொண்டிருந்த பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் ( வயது 62) என்பவரை கொட்டி உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுப்பிரமணி (வயது 58) மற்றும் அரவிந்தராஜ் கன்னியம்மாள் பாலகிருஷ்ணன் கணேஷ் குமார் உட்பட10 பேரை தேன் குளவி கொட்டியதில்பலத்த காயம் அடைந்தனர்.


மேலும் படிக்க | 'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி...' நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?



இதில் சுப்பிரமணி, சண்முகம் ஆகியோரை 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து தண்ணீர் மற்றும் புகை அடித்ததில் அங்கிருந்த குளவிகள் சென்று விட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


மேலும் படிக்க | சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார்: எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ