நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காக பி.எஸ்.என்.எல் பொறியாளர் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து பெண்கள் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்தனர். பாலியல் பலாத்காரத்துக்கு (Rape) ஆளான சிறுமியின் தாயார் தினக்கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார், தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படுத்த படுக்கையாக உள்ளார். 


"நான்காம் வகுப்பு படிக்கும்போது பாதியில் படிப்பை நிறுத்திய அந்த சிறுமி தனது மூத்த சகோதரியுடன் வசித்து வந்தார்.  அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். பாதிக்கப்பட்டவர் 4 ஆம் வகுப்பு படிப்பவர், அவரது மூத்த சகோதரியுடன் தங்கியிருந்தார். அவர் அருகிலுள்ள வீடுகளில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்" என்று நாமக்கல் எஸ்.பி பி. சக்தி கணேசன் கூறினார். 


காவல் துறையின் கூற்றுப்படி, சிறுமியின் சகோதரியின் அண்ணன் முதலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவரை முதலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். பின்னர், அவரது நண்பர்களும், சிறுமி வேலை செய்த வீட்டு ஆண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினார்கள். 


ALSO READ: பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார் Class 11 மாணவி: FB Search மூலம் பிடிபட்ட குற்றவாளிகள்


இரு சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமியின் பெற்றோர் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு (DCPO) புகார் அளித்தனர்.


பின்னர், DCPO நடத்திய விசாரணையில் சிறுமி 13 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்பது தெரிய வந்தது. திங்களன்று, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) புகார் பதிவு செய்யப்பட்டது. 


"இன்ஸ்பெக்டர் ஏ ஹேமாவத் தலைமையிலான AWPS குழு செவ்வாய்க்கிழமை மாலை 12 பேரை கைது செய்துள்ளது. மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்று எஸ்.பி.  கூறினார்.


பாதிப்புக்குள்ளான சிறுமி இப்போது நாமக்கலில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். 


மார்ச் மாதத்தில் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவத்தில், தமிழகத்தில் (Tamil Nadu) ஒரு இளம்பெண் மூன்று நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பூந்தமல்லியில் நடந்தது. 15 வயதான அந்த சிறுமியை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் கைவிட்டதாக கூறப்படுகிறது.


ஒரு உறவினரின் வீட்டில் வளர்ந்த அந்த சிறுமி அரசுப் பள்ளியில் படித்து வந்தார். மார்ச் 18 அன்று, அவர் அருகிலுள்ள கடைக்குச் சென்றார். வெகு நேரம் ஆனபின்னும் அவர் வீடு திரும்பவில்லை. அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மணி மற்றும் செல்வராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


நாமக்கல்லில் (Namakkal) தற்போது நடந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரண்டு ஆண்டு காலம் சிறுமி அனுபவித்த கொடுமையை நினைத்து வேதனைப்படும் பொது மக்கள், குற்றவாளிகளுக்கு தீவிர தண்டனை வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


ALSO READ: தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR