சம்பாதிக்கவே இல்லை! எப்படி வரி கட்டுவது? நீதிமன்றத்தை நாடிய ரஜினிக்கு நீதிபதி எச்சரிக்கை
நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்
சென்னை: நடிகர் ரஜினியின் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை கார்ப்பரேஷன் (Chennai Corporation) விதித்த ரூ .6.5 லட்சம் சொத்து வரியை எதிர்த்து, ரஜினிகாந்த் (Rajinikanth) தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி, ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீண்டிக்க கூடியதாக உள்ளது. உடனடியாக வழக்கை வாபஸ் பெறுவதற்கான உறுதியளிக்க வேண்டும், இல்லையென்றால் என ரஜினிகாந்த் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் என எச்சரித்தார்.
நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்ற (Chenai High Court) நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் டூ செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கான சொத்து வரியை கேட்டு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் அனுப்பிய நோட்டீசை அடுத்து நடிகர் ரஜினி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். திருமண மண்டபத்திற்கு அவர் தவறாமல் சொத்து வரி செலுத்துவதாகவும், கடைசியாக பிப்ரவரி 14 ஆம் தேதி வரி செலுத்தப்பட்டதாகவும் நடிகரின் ஆலோசகர் தெரிவித்திருந்தார்.
ALSO READ | ‘இப்ப இல்லனா, எப்பவுமே இல்லை’: ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களின் சுவரொட்டிகள்!!
கொரோனா தொற்றுநோய் காரணமாக கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு மத்திய மற்றும் மாநில அரசால் விதிக்கப்பட்ட நாள் முதல் ரஜினியின் திருமண மண்டபம் காலியாகவே இருந்தது. மார்ச் 24 முதல் வாடகைக்கு விடப்படவில்லை என்று அவரது ஆலோசகர் தெரிவித்திருந்தார்
மார்ச் 24 ஆம் தேதிக்குப் பிறகு (லாக் டவுன் 1) திருமண மண்டபத்தில் நடந்த அனைத்து முன்பதிவுகளையும் நடிகர் ரத்து செய்ததாகவும், அரசாங்க அறிவுறுத்தல்களின்படி முன்கூட்டியே பணத்தை திருப்பித் தந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து வரி மீதான காலியிட நிவாரணத்திற்கு தனக்கு உரிமை உண்டு என்றும் இது தொடர்பாக செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னை கார்ப்பரேஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், எந்த பதிலும் இதுவரை இல்லை என்றும் நடிகர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR