சென்னை: தமிழகத்தில் (Tamil nadu) இன்னும் எட்டு மாதங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை (Rajinikanth) அரசியலில் முழுமையாக இறங்கக்கோரும் சுவரொட்டிகள் காணப்பட்டன.
“அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்”, “கட்சி வேறு, ஆட்சி வேறு” “இப்ப இல்லனா, எப்பவுமே இல்லை” என்று முழங்கிய பல சுவரொட்டிகளை பல இடங்களில் காண முடிந்தது. இந்த சுவரொட்டிகளில் ஒரு ரஜினி ரசிகரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்தான் இவற்றை வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 12 அன்று, சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ரஜினிகாந்த், ‘அரசியலை சுத்தம் செய்வதற்கான’ தனது பார்வையை மட்டுமே கோடிட்டுக் காட்டியதோடு, தனது சொந்த அரசியல் பயணத்தைப் பற்றி எதுவும் தெளிவாகக் கூற மறுத்துவிட்டார். “நான் ஒருபோதும் தமிழக முதல்வராக வருவதையோ அல்லது சட்டமன்றத்தில் அமர்ந்து பேசுவதையோ பற்றி எண்ணிப் பார்த்ததில்லை. அது என் எண்ணங்களில் இல்லை. சட்டசபையில் ஒரு புதிய அலை, புதிய சக்தி மற்றும் புதிய ரத்தம் பாய்ந்து..அது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என விரும்புகிறேன், அதற்கு நான் ஒரு பாலமாக இருப்பேன்” என்று அவர் கூறியிருந்தார்.
60-65 சதவிகித நபர்கள் 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கும் ஒரு கட்சியைப் பற்றிய தனது தொலைநோக்குப் பார்வை குறித்து அவர் தெரிவித்திருந்தார். "போதுமான தகுதி மற்றும் ஒழுக்கமான சமூக நிலைப்பாடு கொண்ட இளைஞர்கள் கட்சியில் இருப்பார்கள். மீதமுள்ள 30-40 சதவீதம் பேர், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். இதில் பெண்களும் அடங்குவர்” என்று அவர் கூறினார்.
ALSO READ: Watch: எஸ்.பி.பி நன்றாக முன்னேறி வருகிறார், iPad-ல் கிரிக்கெட் பார்க்கிறார்: சரண்
இருப்பினும், மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் விதிக்கப்பட்ட லாக்டவுனுக்குப் பின்னர், பொது நிகழ்வுகள், அறிவிப்புகள் அல்லது அரசியல் அறிக்கைகள் என்று எதையும் அவர் தரப்பிலிருந்து காணவில்லை. அவர் தனது அரசியல் பயணத்தைப் பற்றி உறுதியாக எதுவும் சொல்லாத நிலையில், தற்போது, அவர் நவம்பர் மாதம் தனது கட்சியைத் தொடக்குவார் என்ற பேச்சுக்கள் மீண்டும் அடிபடத் தொடங்கியுள்ளன.
இந்த ஊகங்கள் சமூக ஊடகங்களில் பரவவே, ரஜினி தரப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. ரஜினியின் வீடு இருக்கும் போயஸ் தோட்டம் பகுதியில் ஊடகங்கள் செல்வதைத் தடுக்குமாறும், ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தக்கூடும் என்ற ஊகத்தில் அங்கம் கூட்டம் கூடுவதை நிறுத்துமாறும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப் பட்டது.
ரஜினி மக்கள் மன்றமும் (Rajini Makkal Mandram) , ரஜினி, மார்ச் மாதத்திற்குப் பிறகு தங்களுடன் எந்தவித சந்திபையோ பேச்சுவார்த்தைகளையோ மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளது.
“மக்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். இது ரஜினிக்காக அல்ல. இது தமிழக மக்களுக்காக. 15-20 சதவீத வாக்குகளைப் பெற நான் இங்கு வரவில்லை, இது எனக்கு உள்ள ஒரே வாய்ப்பு. எனக்கு 71 வயதாகிறது, 2026 இல் அடுத்த வாக்கெடுப்புகளுக்குள் எனக்கு வயது 76 ஆகிவிடும். இந்த செய்தி அதிகமான மக்களை அடைந்ததும், பொது மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினால், அப்படி நடந்தால், நானும் அரசியலில் முழுதாக உள்ளே நுழைவேன்” என்று அவர் சூசகமாக மார்ச் மாதம் கூறியிருந்தார்.
ALSO READ: சூர்யாவுடன் முதல் முறையாக இணையும் கதாநாயகி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் "வாடிவாசல்"