குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் பெறுவது எப்படி.?
வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, இதற்கான அரசாணை கடந்த பிப்பிரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் இந்த ஆண்டு முதல் ஒரே தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்வு மூலம் 5529 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நேர்முகத் தேர்வு உள்ள குரூப் 2 தேர்வின் மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
மேலும் படிக்க | TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
நேர்முகத் தேர்வு அல்லாத, அதாவது குரூப் 2 ஏ தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், அரசின் பல்வேறு துறைகளின் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், வரும் மே 21ஆம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று TNPSC அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | பயிற்சி இல்லாமலே போட்டித்தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR