சாலையில் ஒய்யாரமாய் யானை, பீதியில் வாகன ஓட்டிகள்: வீடியோ வைரல்
‘என்னை தாண்டி போக தில்லு வேண்டும்..’ என கூறும் வகையில், சாலையில் ஒய்யாரமாய், கம்பீரமாய் நின்று மாஸ் காட்டிய யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
‘என்னை தாண்டி போக தில்லு வேண்டும்..’ என கூறும் வகையில், சாலையில் ஒய்யாரமாய், கம்பீரமாய் நின்று மாஸ் காட்டிய யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயார் செல்லும் சாலையில் மரக் கிளையை உடைத்த யானை சாலையை வழிமறித்து நின்றுகொண்டிருந்தது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலர் நூலிழையில் உயிர் தப்பியதாக கூறி வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி மாயார் சிங்கார வாழைத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் அடர்ந்த வனப்பகுதிகளிடையே உள்ளன.
நேற்று இரவு மாயார் செல்லும் சாலையில் மரத்தை உடைத்த காட்டு யானை சாலையை வழிமறித்தது. யானை பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்ததால், அதைப் பார்த்த அனைவருக்குமே கலக்கம் உண்டானது. இதன் காரணமாக அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் யானையை கடந்து செல்ல அச்சப்பட்டனர். அவ்வழியாக வாகனத்தில் வந்த சிலர் சாதுர்யமாக யானையை கடந்து சென்றபோது வீடியோ எடுத்துள்ளனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க | ஒய்யாரமாய் உலாவந்த ஒற்றையானை: அச்சத்தின் உச்சிக்கு போன வாகன ஓட்டிகள்
யானைகள் இப்படி சாலைகளை வழிமறிப்பது தற்போது பல இடங்களில் அடிக்கடி நடக்கிறது. காலை மற்றும் இரவு நேரங்களிலும் தண்ணீர் உணவு தேடி, காட்டுப்பகுதிகளைக் கடந்து சாலைகள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வரும் யானைகள் சில சமயம் மக்களுக்கு தீங்கிழக்கும் செயல்களையும் செய்து விடுகின்றன.
இப்படிப்பட்ட சமயங்களில் மக்கள் உடனடியாக வனத்துறையினரை நாடி உதவி பெறுகிறார்கள். வனத்துறை அதிகாரிகள் சாதுர்யமாக யானைகள் மற்றும் பிற விலங்குகளை அவற்றின் இருப்பிடம் நோக்கி அனுப்பி வைக்கும் பல வீடியோக்களையும் நாம் சமீப காலங்களில் அதிகமாக பார்த்து வருகிறோம்.
மேலும் படிக்க | விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை- சிறார்கள் 4 பேருக்கும் ஜாமீன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR