மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். தனம், தானியம், நிலையான இன்பம், ஆரோக்கியம், சொர்க்கம் மற்றும் வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரிக்கு கொலு வைப்பது முக்கியமானது. ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே நவராத்திரி கொலு வைப்பதன் நோக்கம்.


முதல் படி: அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள். இரண்டாம் படியில்: இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள். மூன்றாம் படியில்: மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள். நான்காம் படியில்: நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள். ஐந்தாம் படியில்: ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள். ஆறாம் படியில்: ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள். ஏழாம் படியில்: சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள். எட்டாம் படியில்: தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள். ஒன்பதாம் படியில்: பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.


மேலும் படிக்க | கோவையில் ஆயுத பூஜையை ஒட்டி விண்ணைத் தொடும் பூக்கள் விலைகள்!


நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும். அந்த வகையில் இராமேஸ்வரத்தை சேர்ந்த தம்பதியினர் கடந்த 35 வருடங்களாக கொலு பொம்மைகள் வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றர், இந்த கொலுவில் 1000த்திற்கும் மேற்பட்ட பொம்மைகளான ஆதி காலத்தில் வீட்டில் பயன்படுத்திய பித்தளை பொருட்கள், அதே போல ராமர் பாலம், பிரதோஷத்தை நினைவு கூறும் வகையில் நந்தி மேலே இருக்கும் சிவன், விவசாயத்தை  குறிப்பது போன்று, விலங்குகள், கைத்தறி, சாமி சிலைகள் உள்ளிட்ட 1000த்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர், இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  வழிபட்டுச்செல்கின்றனர்.


மேலும் படிக்க |  சென்னை நெடுஞ்சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்; பரபரப்பாக அள்ளிய மக்கள் - கடைசியில் செம ட்வீஸ்ட்


மேலும் படிக்க |  100 கோடி சுருட்டப்பட்டுள்ளது... ஊழல் வெளிச்சம்தான் விடியலா?... அண்ணாமலை கேள்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ