கோவையில் ஆயுத பூஜையை ஒட்டி விண்ணைத் தொடும் பூக்கள் விலைகள்!

தற்போது நவராத்திரி பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2022, 06:05 PM IST
  • நவராத்திரி பண்டிகை காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.
  • கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்து இருந்தது.
கோவையில் ஆயுத பூஜையை ஒட்டி விண்ணைத் தொடும் பூக்கள் விலைகள்!  title=

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன. கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ மட்டும் கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது.

இந்த நிலையில் தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்து இருந்தது. மேலும் நாளை மறுநாள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க |  சென்னை நெடுஞ்சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்; பரபரப்பாக அள்ளிய மக்கள் - கடைசியில் செம ட்வீஸ்ட்

அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.320, அரளி ரூ.300, தாமரை ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ரூ. ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.160- ஆக அதிகரித்து இருந்தது. 

அதேபோன்று வெள்ளை பூசனி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.15 முதல் 30 வரையும், சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.220, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க |  100 கோடி சுருட்டப்பட்டுள்ளது... ஊழல் வெளிச்சம்தான் விடியலா?... அண்ணாமலை கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

மேலும் படிக்க | Viral Video: யானையின் ‘Cat Walk’; இணையவாசிகளை சொக்க வைத்த ஒய்யார நடை!

மேலும் படிக்க | ‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News