Illicit Liquor Death: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இன்று வரை 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, அவசர சிகிச்சை பிரிவில் 10 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிகிச்சை பெற்று வரும் 42 நபர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சீலா தேவி சேரன், ஆற்றல் அரசு  உள்ளிட்ட பலர் இருந்தனர்.


மேலும் படிக்க | கள்ளச்சாராய விவகாரம்: சமூக போராளிகள், பிரபலங்கள் எல்லாம் எங்கப்பா போனீங்க? எடப்பாடி பழனிசாமி


இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், "இத்தனை பேர் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றினால் மட்டுமே சாராயத்தை ஒழிக்க முடியும். கள்ளச்சாராயத்தை தடுக்க சிறப்பு உளவுப்பிரிவு அமைத்து கள்ளச்சாராயத்தை தடை செய்ய வேண்டும், மதுவிலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 


அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த கோரி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் அவருடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயாராக உள்ளோம்" என தெரிவித்தார். 


கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். குடிப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மது குடிப்பவர்களை இந்த அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். 


நேற்று விழுப்புரம் வந்து, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்றவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கள்ளச்சாராயத்தை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்திலும் ஈடுபட்டார்.


அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்,'முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்றவர்கள், அதில் மெத்தனால் எரிச்சாரயம் பயன்படுத்தி உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, விழுப்புரம் எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.


விழுப்பரத்தை போலவே செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | MK Stalin: டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயம்... எதனால் இத்தனை உயிரிழப்புகள் - முதல்வர் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ