உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு ஆபத்து - எச்.ராஜா!
உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆனால் தமிழ்நாடு இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர தத்த ஸ்ரீ பாத ஸ்ரீ சாய் பீடம் அமைந்துள்ளது. இங்கு நேற்று ஸ்ரீ திரு விக்ரம மகாதேவ ஞான வல்லப தத்தாத்ரேயர் மகா யாகம் ஆலய நிறுவனர் ஸ்ரீ லலிதா வல்லபாந்தமை தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறுகையில், சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, ஆகையால் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி வைத்துள்ளதால் மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக வாங்க முடியாது என்பதால் சாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.
ஆகையால் தான் சனாதானத்தை கொசு டெங்கு போன்றவை அழிப்பது போல் பேசிக்கொண்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் விரைவில் ஆனால் தமிழ்நாடு இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது. ஆம்ஸ்ட்ரக் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேடத்தை கொலை செய்தது, ஏன்? ஜெயிலிலிருந்து வெளியே வந்த நபர் இடம் எப்படி ஆயுதம் வந்தது, ஜெயிலில் இருந்து எப்படி அதிகாலை 5 மணிக்கு குற்றவாளியை கொண்டுவரப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு பல சந்தேகம் எழுது வருவதால் இது திட்டமிட்டபடி 100% கொலைதான், இதில் ஆளும் கட்சியினர் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் வருவதால் ஆரம்பகட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைவரும் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் - அண்ணாமலை
கோவை துடியலூர் அருகே தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசும்போது, நீங்கள் அரசியல்வாதிகளுக்கு உயர்ந்த இலக்கு வைக்க வேண்டும். அதற்காக அந்த அரசியல்வாதிகள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் சமுதாயம் மாறும். மூன்றாவது தகவலாக, எந்த இடத்திலும் கூட லஞ்சம் கொடுப்பதை நீங்கள் எதிர்க்க வேண்டும். இளைஞர்கள் என்ன ஆனாலும் லஞ்சம் தர மாட்டேன் என்று உறுதி எடுத்து அதன்படி நடக்க வேண்டும். சவுத் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்து சென்றபோது உங்களுக்கு இதில் அனுமதியில்லை என்று டிக்கெட் பரிசோதகர் தெரிவித்துள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகர் உடனடியாக காந்தியையும், அவருடைய உடமையையும் வெளியே தள்ளி விடுகிறார்.
அன்று அவர் வழக்கறிஞராக படித்து பணம் சம்பாதிப்பதற்காக அங்கு சென்று இருக்கலாம், ஆனால் இந்த தனி மனிதனுக்கு ஏற்பட்ட இழப்பை மாற்ற அவர் எடுத்த வழிதான் 2வது வழி. ஆனால் தனிமனிதாக நின்று காந்தியடிகள் போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார். நீங்கள் தனி மனிதராக நின்று லஞ்சத்தை முறியடிக்க முடியும். அதேபோல காமராஜர் பெரிய அரசியல் மாற்றத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். அதனால் நான் லஞ்சத்தை அறவே அகற்ற வேண்டும். தனிமனிதமாக போராடி காந்தியடிகள், காமராஜர் வெற்றி கண்டுள்ளார். அதேபோல நாமும் வெற்றி பெற முடியும். நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். உங்களுக்கு மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம். உங்கள் கோரிக்கை எங்கள் காதுக்கு வந்தவுடன் அந்த கோரிக்கைகளை எங்களுக்கு கடமையாக மாறி வருகிறது. நாங்களும் போராடி உங்கள் கோரிக்கைகளை வெற்றி பெற செய்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | துணை முதலமைச்சர் பதவியை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் - அமைச்சர் துரைமுருகன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ