துணை முதலமைச்சர் பதவியை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் - அமைச்சர் துரைமுருகன்!

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து தீர்ப்பாயம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம் என காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

Written by - RK Spark | Last Updated : Jul 21, 2024, 02:16 PM IST
  • நாடகம் என்றால் என்னவென்று எடப்பாடிக்கு தெரியுமா?
  • அதிமுக கட்சிக்குள் நடப்பது தான் நாடகம்...
  • கூத்துகாரனுங்க என சிரித்தபடியே துரைமுருகன் பதில்.
துணை முதலமைச்சர் பதவியை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் - அமைச்சர் துரைமுருகன்! title=

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் காட்பாடியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். கூட்டத்திற்கு பின் செய்திகளிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள். இது எல்லாரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டிய விஷயம். கூட்டு முயற்சியால் எடுக்கப்பட வேண்டிய விஷயம். காட்பாடி தொகுதியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் அனைத்து இடங்களுக்கும் சென்றாலும்,அதிகாரியிடம் பேசும் பொழுதும் எப்பொழுதும் ஒரே மாதிரியாக தான் இருப்பேன் என்று கூறினார்.

மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்

அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஆய்வு செய்வது ஒரு நாடகம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு? நாடகம் என்றால் என்னவென்று எடப்பாடிக்கு தெரியுமா அதிமுக கட்சிக்குள் நடப்பது தான் நாடகம்..... கூத்துகாரனுங்க என சிரித்தபடியே பதில் பதிலளித்தார். மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் திமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் உங்கள் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, திமுக பொதுச்செயலாளர் இருக்கும் கட்சி தான் ஆளும் கட்சி ஆளும் கட்சி என்னவோ அதுதான் என் கட்சி என மின்கட்டண உயர்வுக்கு கட்டாமாக பதில் அளித்தார். கனிமவள துறையில் கொள்ளடிக்கப்பட்டுள்ளதாக அறநிலைத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தடுத்துள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு? அதில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது என துரைமுருகன் கூறினார்.

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து தீர்ப்பாயம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். இந்த வழக்கில் கர்நாடகா அரசு 2 அல்லது 3 தடவை பேசி பார்க்கிறோம் அவசரப்பட்டு நீங்கள் தீர்ப்பாயத்தை அமைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை  கேட்டுக் கொண்டார்கள் அதன் அடிப்படையில் தான் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயம் அமைப்பதில் நாங்கள் அதில் உறுதியாக உள்ளோம். காரணம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்ல திட்டம் தான். ஆனால் பிடிவாதக்காரர்களோடு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது முடியாத காரியம். இதுவரை கர்நாடக அரசுடன் 50 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் தீர்ப்பாயத்தை அமைக்க கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் எந்த முடிவும் எட்டாது எனவேதான் தீர்ப்பாயத்தை அமைக்க கேட்டுள்ளோம்.

முல்லைப் பெரியாறு அணை நேற்று கண்காணிப்பு குழு ஆய்வு செய்யப்பட்டது. அதில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லா அணைகளிலும் சிறிதளவு தண்ணீர் கசிவு ஏற்படத்தான் செய்யும். இது ஒரு பிரச்சினையே அல்ல. கொடுத்தால் யார் தான் ஏற்க மாட்டார்கள் என்று பதில் அளித்தார்.

மேலும் படிக்க | கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News