சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தை ( IIT- Chennai) சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான நிலைமை குறித்து ஆய்வு செய்து, வெள்ள அபாயத்தை கணிசமாகக் குறைக்க எண்ணூர் துறைமுகத்தில் முகத்துவாரத்தில் அமைக்க பரிந்துரைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிர புயல் சூழ்நிலைகள், ஆக்ரோஷமான அலைகள் மற்றும் ஆற்றில் வெள்ளம் குறித்த ஆகியவை குறித்த ஆய்வில்,  எண்ணூரின்  வாயில் குறுகலாக இருப்பதால், அதை ஒட்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாயம் அதிகம் இருப்பதை கண்டறிந்துள்ளது.


வளைவான சுவரை ஏற்படுத்துவதால், எந்த பயனும் இருக்காது என்றும், அதனால் கடல் நீர் பரிமாற்றம் தடுக்கப்பட்டு வெள்ள அபாயம் அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


கொசஸ்தலை ஆற்றங்கரைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தை தடுப்பதற்கான தீர்வுகளை கண்டறிய, காமராஜர் துறைமுகம் முன்மொழிந்த ஆய்வை,  ஐ.ஐ.டி மெட்ராஸ் பெருங்கடல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கே முரளி, பேராசிரியர் எஸ்.ஏ.சன்னசிராஜ் மற்றும் பேராசிரியர் வி.சுந்தர் ஆகியோர் நடத்தினர்.


கரையிலிருந்து செங்குத்தான சுவர்களை சிற்றோடையின் இருபுறமும் -5 மீ நீர் ஆழம் வரை கட்ட ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது.


அடையார், கூவம் மற்றும் எண்ணூர் சிற்றோடைகளின் முகப்பில், மணல் திட்டுகள்  உருவாவதால் வெள்ளம் ஏற்படுகிறது.


மேலும் படிக்க | TN School Reopening: விரைவில் வெளிவரவுள்ளன வழிகாட்டுதல்கள்!!