இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000: இன்று வெளியாகிறதா அறிவிப்பு
வரவிருக்கும் பட்ஜெட்டில் பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை: இன்று மாலை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து அரசின் அடுத்த முக்கிய நிகழ்வான பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து கவனம் திரும்பியுள்ளது.
இதற்கிடையில், இன்று மாலை தமிழக முதல்வர் தலைமையில் நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் வரவிருக்கும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்படலாம். சில குறிப்பிட்ட துறைகளில் மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெறுவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கபப்டும்.
மேலும் படிக்க | விரிசல் விடுகிறதா திமுக கூட்டணி? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்!!
தமிழக பட்ஜெட் எப்போது?
மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சில வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், அவற்றை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படக்கூடும் என கூறப்படுகிறது
இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000
வரவிருக்கும் பட்ஜெட்டில் பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 'குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்' திட்டம் பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்படக்கூடும் முக்கிய அறிவிப்புகள் குறித்து இன்று மாலை நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கபடும். தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற வாக்குறுதி பெண்களை மகிழ்வித்த நிலையில், அது இன்னும் ஏன் செயல்படுத்தப்படாமல் உள்ளது என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான விடை கிடைக்கும் என்று தோன்றுகிறது.
மேலும் படிக்க | ’பொறுப்பை விட்டு விலகுக’ திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR