COVID-19 தொற்றுநோய் நாம் வாழும் உலகில் பல மாற்றங்களை செய்து விட்டது. நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இதனால் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அரசாங்க செயல்முறைகளும் மாறியுள்ளன.  தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் காணப்படாத சூழலால், தமிழக சட்டமன்றம் (Tamil Nadu Assembly) அதன் அடுத்த அமர்வுக்கு, செப்டம்பர் 14 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் (Fort St George) உள்ள அறைகளுக்கு பதிலாக, மிகவும் விசாலமான அசராங்க ஆடிடோரியத்தில் (Government Auditorium) கூட்டப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை சட்டசபை உறுப்பினர்கள், செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் (Kalaivanar Arangam) மூன்றாம் மாடியில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் கூடக் கோரி அறிவிப்பு விடுத்தார் என ஒரு ராஜ் பவன் செய்திக் குறிப்பு தெரிவித்தது. வணிக ஆலோசனைக் குழு கூடி அமர்வுக்கான நாட்களின் எண்ணிக்கையை பின்னர் தீர்மானிக்கும்.


ALSO READ: வெளிவரும் வேளையில் முடக்கப்படும் சொத்துக்கள்: இது சசிகலாவின் விதியா அல்லது அரசியல் சதியா?


பரந்த வாகன நிறுத்துமிட வசதியைத் தவிர, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சமூக தொலைதூர விதிமுறைகளை உறுதிப்படுத்த ஆடிட்டோரியம் போதுமான இடத்தை வழங்குகிறது. COVID-19 முன்வைத்த அச்சுறுத்தல் காரணமாக அமர்வை நடத்த ஒரு பாதுகாப்பான இடத்தை அடையாளம் காணுமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து சட்டமன்ற சபாநாயகர் பி தனபால் ஆகஸ்ட் 22 அன்று கலைவாணர் அரங்கம் வளாகத்தில் ஆய்வு செய்தார்.


ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடையவிருந்த முந்தைய பட்ஜெட் அமர்வு, கோவிட் காரணமாக முன்னதாகவே, அதாவது மார்ச் 24 அன்று நிறைவு செய்யப்பட்டது. இந்த வேளையில்தான் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு தழுவிய லாக்டௌன் தொடங்கியது.


ஆளும் அதிமுக ஆதிக்கம் செலுத்தும் சபையில் சபாநாயகர் உட்பட 234 பேர் உள்ளனர். மூன்று காலியிடங்கள் உள்ளன.


லாக்டௌனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், இன்னும் இந்த வைரஸ் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை, இதற்கான மருந்துகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்ற உண்மைகளை மக்கள் நினைவில் கொள்வது மிக அவசியமாகும். மிகவும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அப்படி செல்லும்போதும், முகக்கவசங்கள், சுத்திகரிப்பு சாதனங்கள், தனி மனித இடைவெளி என அனைத்தையும் நினைவில் கொள்வது மிக அவசியமாகும்.


ALSO READ: இன்றைய நிலவரம்: மரணம் 96; கொரோனா பாதிப்பு 5,928; மொத்த உயிரிழப்பு 7,418