விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டிய பின் சேலம் - சென்னை 8 வழிச்சாலை செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக கூட்டணி வேட்பாளார்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சேலத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் “ அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் கூட்டணி. இந்தக்கூட்டணி மற்றும் பிரதமர் மோடியின் காரணமாக தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும். எனவே அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.


சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சேலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு கூடுதல் விலை வழங்கப்பட்டது. முதலமைச்சர் இந்த திட்டத்தில் அதிக அக்கறையுடன் உள்ளார். எனவே மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டியப்பின் குறிப்பிட்ட காலத்திற்குள் 8 வழிச்சாலை திட்டமிட்டப்படி செயல்படுத்தப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். தேசிய ஜனநாயக்கூட்டணியின் வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற செய்தால் உங்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்” என்று தெரிவித்தார்.