கலக்கும் காக்கிச்சட்டை: COVID-லிருந்து குணமடைந்த 40 போலீசார் பிளாஸ்மா தானம் செய்தனர்!!
கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 40 தமிழக போலீசார் பிளாஸ்மாவை நன்கொடையாக அளித்துள்ளதாக தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா காலத்தில் தொற்று அதிகரிக்கும் அதே வேளையில் பல நல்ல விஷயங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தன்னலம் பாராமல் முன்னணி வீரர்கள் தங்கள் பணிகளை ஆற்றி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அவ்வகையில் காவல் துறையும் பாராட்டத்தக்க பல பணிகளை செய்து வருகிறது. கொரோனா வைரஸிலிருந்து (Corona Virus) மீண்ட 40 தமிழக போலீசார் பிளாஸ்மாவை நன்கொடையாக (Plasma Donation) அளித்துள்ளதாக தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் (Dr C Vijayabaskar) தெரிவித்துள்ளார்.
"இதுவரை 76 பேர் பிளாஸ்மாவை நன்கொடையாக அளித்துள்ளனர், 89 நோயாளிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இன்று, COVID-19 –லிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளனர். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பிளாஸ்மா வங்கிகள் நம் மாநிலத்தில் உள்ளன," என்று திரு. விஜயபஸ்கர் ஊடகங்களுடனான தனது சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய சென்னை போலீஸ் கமிஷனரும் "COVID-19 இலிருந்து மீண்ட மற்ற காவல் துறை பணியாளர்களும் பிளாஸ்மாவை தானம் செய்ய தயாராக உள்ளனர்" என்று கூறினார்.
ALSO READ: இன்று தமிழகத்தில் கொரோனா நிலவரம்: பாதிப்பு- 5,835; மரணம் -119
காவல் துறையினரின் இந்த பிளாஸ்மா தானம் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த வகையில் காவல் துறை ஒரு முன்மாதிரியாக செயல்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, தற்போது, தமிழகத்தில் மொத்தம் 52,929 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர். 5,278 பேர் இந்த ஆபத்தான தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
ALSO READ: வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.. வீதிகளில் வேண்டாம்: TN Govt