நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் முறைந்த வரும் இந்த நேரத்தில்,. மனிதர்களிடையே பரவி வரும் கொடிய கோவிட்-19 (Covid 19) வைரஸ், விலங்குகளுக்கும் பரவியுள்ளதாக ஆங்காங்கே செய்திகள் வந்தன. கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 புலிகளுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் உள்ள தெப்பக்காடு யானை முகாம் நாட்டின் மிகப் பழமையான யானை முகாம் ஆகும். இது 1927 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தெப்பக்காடு யானை முகாம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலயம், ஆகியவை தமிழ்நாடு வனத்துறையால் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில் முதுமை காடுகளில் உள்ள யானை முகாமில் உள்ள 28 (2 குட்டி யானகள் மற்றும் 26 யானைகள்) யானைகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய நாசி மற்றும் குதங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளன. 


ALSO READ: FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு


பரிசோதிகப்பட்ட யானைகள் ஏதேனும் கொரோனா அறிகுறிகள் இருந்ததா என்று கேட்டபோது, ​​இதுவரை எந்த அறிகுறிகளும் இல்லை என்று கூறிய அதிகாரிகள் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனை நடத்தப்படுவதாக  ஜீ மீடியாவிடம் கூறினார். முதுமலை காட்டில் உள்ள விலங்குகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்த அறிகுறிகளும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


முதுமலை புலிகள் சரணாலயம், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஆனால் இது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. இதில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி போன்ற விலங்குகளை இங்கே காணலாம். தமிழ்நாட்டில் தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால், முதுமலை உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.


ALSO READ: COVID-19 Update: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,448 பேர் பாதிப்பு, 351 பேர் உயிர் இழப்பு!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR