நெல்லையில் பெண் காவல் ஆய்வாளர் தூக்க மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதன் காரணாமாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உயர் அதிகாரிகள் அளித்த நெருக்குதல்கள் காரணமாக உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பெண் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லை மாநகர காவல் துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி இந்த நிலையில் மகேஸ்வரி நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பணிச்சுமை காரணமாகவும் உயரதிகாரிகளின் கொடுத்த நெருக்கடிகள் காரணமாகவும் மனம் நொந்து, மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட நீதிமன்றம் ஆட்சியர் குடியிருப்பு ஏராளமான கல்வி நிலையங்கள் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இயங்கும் பகுதி என்பதால் பாளையங்கோட்டை எப்போதுமே நெருக்கடியுடன் காணப்படும். ஆனால் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் துறையில் மிக குறைந்த அளவிலேயே காவலர்கள் பணியாற்றுகின்றனர். எனவே நெல்லை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


ALSO READ | மரணத்திற்குப் பிறகு கைரேகை மாறுமா.. அறிவியல் கூறுவது என்ன..!!


பணிச்சுமையோடு, உயர் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்குதல்களாலும், காவலர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பலர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருணாசலம் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்ற போதிலும், அடுத்தடுத்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக நெல்லை மாநகரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


குறிப்பாக ஹைகிரவுன்ட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி என்பவர் உயரதிகாரி திட்டியதன் காரணமாகவே, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.


தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவலர்களுக்கு வார விடுமுறை அளிப்பது, நெல்லை மாநகரில் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பெண் காவல் ஆய்வாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நெல்லை மாநகர காவல் துறையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ALSO READ | 30 அடி உயர மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR