30 அடி உயர மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்!

கார்-பைக் மோதல் காரணமாக 30 அடி உயரம் பறந்து மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2021, 10:12 AM IST
30 அடி உயர மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்! title=

வத்தலக்குண்டு:  மதுரையை அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர்கள் காமராஜ் (27) மற்றும் அஜித்கண்ணன் (25).  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறையை கழிக்க இவர்கள் இருவரும் சுற்றுலா தளமான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தங்களது இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.  அதனையடுத்து ,கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்து விட்டு பொழுதை கழித்தவர்கள் சொந்த ஊர் திரும்ப முடிவெடுவெடுத்தனர். மேலும் கோலாகலமாக சுற்றுலாவை முடித்துவிட்டு இருவரும் நேற்றைய தினம் அதே இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். 

ALSO READ சென்னையில் இன்று மின்சார ரயில்கள் இயங்குமா?

இந்நிலையில் இருவரும் நேற்றைய தினம் மதிய நேரத்தில் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை அடுத்த சிவன்கோவில்மேடு என்ற பகுதியில் அடைந்து ,பயணித்துக்கொண்டிருந்தனர். அந்த சமயம் சிவகங்கையில் இருந்து பண்ணைக்காடு பகுதி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டினை இழந்த கார் திடீரென்று இருவரும் பயணித்த இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது.  இதையடுத்து , கார் பலமாக மோதியதால் அந்த வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த காமராஜ் ஏறத்தாழ 30 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு அங்கு நின்று கொண்டிருந்த போஸ்ட் மரத்தில் உள்ள மின்கம்பியில் தொங்கியுள்ளார்.

இதில் மின்கம்பி மூலம் அவரது உடலில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அஜித்கண்ணன் என்பவரும் இந்த விபத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தோடு அவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.   மேலும் இந்த விபத்தில் எதிரியை வந்து மோதிய கார் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  பின்னர் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதனையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த நிலக்கோட்டையை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்த காமராஜின் சடலத்தை மீட்டு எடுத்தனர்.  மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசைக்கட்டி நிற்கும் கார்கள்! காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News