இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாது - நடிகர் சரத்குமார்!
பிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு திறந்தவெளி வேனில் பேசிய அவர் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பிரச்சாரத்தின் போது நடிகர் சரத்குமார் பேசியதாவது, திமுகவினர் கீழ்த்தரமான அரசியல் செய்வதோடு, அநாகரீகமான சொற்களை பேசி வருகின்றனர். பிரதமர் மோடியை 29 பைசா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் 29 பைசா என்ன என்பதை அவர் கூறுவதில்லை.
மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு
மத்திய அரசுக்கு ஆறு லட்சத்து 58 ஆயிரம் கோடியை வரியாக தமிழக அரசு அனுப்பினால் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 145 கோடியை மத்திய அரசு திருப்பித் தருகிறது. அதற்கு தமிழக அரசு கணக்கு கொடுப்பதில்லை. செலவு கணக்கையும் காட்டுவதில்லை ஏனென்றால் திமுகவினர் ஜெயிலில் இருப்பார்கள், இல்லையென்றால் பெயிலில் இருப்பார்கள். சரக்கு சேவை வரியை மாநில அரசை வைத்துக் கொள்கிறது. கஸ்டம்ஸ் டூட்டியை மட்டும் தான் மத்திய அரசு வைத்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு தலைவர் கிடையாது பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாது. 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு ஆக்குகின்ற சிறப்பான திட்டங்களை மோடி செயல்படுத்தி வருகிறார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு சென்றால் இந்தியர்களை மதிக்க மாட்டார்கள். தற்போது மதிப்பு 100 மடங்கு கூடி இருக்கிறது. 11வது இடத்திலிருந்து இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மத்திய அரசு விவசாயிகளிடம் 32 ரூபாய்க்கு அரிசியை வாங்கி மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்கு கொடுக்கிறது. அதை தமிழக அரசு இலவசமாக கொடுக்கிறது என இங்கு கூறி வருகிறார்கள். இங்கு போட்டியிடுகின்ற 2ஜி ஊழல் காரர்களை தோற்கடிக்க வேண்டும். ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாள் அன்று கணவர்களுக்கு பெண்கள் காப்பி,டீ போட்டு கொடுத்து நேரத்திலேயே ஓட்டு போட அனுப்புங்கள் என்று அவர் பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ