Mr, Miss, Mrs. Tamilnadu அழகுப்போட்டி தொடர்பாக,  ஃபாஷன் இயக்குநர்கள் கருண் ராமன், வினோத், ஆல்ஃபிரெட் ஜோஸ், அபர்னா (Mrs.Tamizhagam 2022) உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜான் அமலன் ஆதரவுடன் யுகியோ நிறுவனத்தின் சார்பில்  2022ஆம் ஆண்டுக்கான Mr, Miss, Mrs. Tamilnadu கோவை விஜய் எலன்சா நட்சத்திர விடுதியில், வரும் அக். 16ஆம் தேதி நடை பெற உள்ளதாக அவர்கள் அறிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏராளமாக நடப்பதால் இம்முறை கோவையை தேர்வு செய்ததாக தெரிவித்த அவர்கள், ஹாஜா மற்றும் நிகில் ஆகியோர் நிகழ்ச்சி முழுவதையும் ஒருங்கிணைக்க உள்ளதாகவும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தலா 30 பேர், திருமதிகள் மற்றும் குழந்தைகள் தலா 20 பேர் என மொத்தம் 100 பேர் பங்கேற்க உள்ளதாகவும் கூறினர்.


மேலும் படிக்க | மதுரையில் இயக்குநர் அமீர் நடத்தும் போட்டி; 10 லட்சம் பரிசுத் தொகை வெல்ல வாய்ப்பு!


இரண்டு சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் Indian Media Works நடத்தும் சர்வதேச அழகுப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். யுகியோ நிறுவனத்தின் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் கருண் ராமன், ஆல்ஃபிரெட் ஜோஸ் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். 


செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜா மற்றும் நிகில்  ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த கருண்ராமன், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதாக ஜான் அமலனை பாராட்டினார். இதுபோன்ற ஃபாஷன் நிகழ்ச்சிகள் நடத்துவது சாதாரண விஷயமல்ல என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் இருந்து நிறைய திறமைசாலிகள் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார். 


பின்னர் பேசிய ஆல்ஃபிரெட் ஜோஸ், "எந்த ஒரு நிகழ்ச்சியும் ஜான் அமலன் இருந்தால் வெற்றி பெறுவது உறுதி. இதுபோன்ற முயற்சிகள் சாதாரணமானதல்ல. இதனை ஒருங்கிணைத்த யுகியோ நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள் ஹாஜா மற்றும் நிகில்  ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களிடம் சென்றடைய இதனை பிரபலப்படுத்த வேண்டும். நானும் கருண் ராமனும் நிகழ்ச்சி நடுவர்களாக  இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார். மேலும் இந்த அழகுப்போட்டியை வினோத், தொகுத்து வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | நன்கொடை வேண்டாம்... ஆசிர்வாதம் மட்டும் போதும் - கட்டுடலுடன் கோரிக்கை வைத்த லாரன்ஸ்