Indian Post Office Latest News: கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாமானது நாளை (30 செப்டம்பர் 2024, திங்கட்கிழமை) மாலை 11 மணிக்கு, அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர மத்தியக் கோட்டம், சென்னை 600017 என்ற முகவரியில் நேர்முகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்


அஞ்சல் துறை சார்ந்த சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு பிரிவின் தலைவர் நேரடியாக விசாரிப்பார். வாடிக்கையாளர்கள் தங்களுடைய புகார்களை அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளர், சென்னை நகர மத்திய கோட்டத்திற்கு 25.9.2024 அன்று அல்லது அதற்கு முன்பு அனுப்பி வைக்க வேண்டும். 


தபால் அல்லது மணியார்டர் சம்பந்தமான புகாரில் அனுப்பப்பட்ட தேதி, அனுப்புனர் மற்றும் பெருநர் பெயர், முகவரி,  கண்காணிப்பு எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். 


புதிய புகார் மீது நடவடிக்கை கிடையாது


சேமிப்பு வங்கி அஞ்சல் காப்பீடு, கிராம அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவர் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரர் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டியதற்கான முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருந்தால், அதனை புகாருடன் இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஏற்கனவே உள்ளூரில் உள்ள தபால் நிலையங்களில் புகார்கள் கொடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட பதில் திருப்தி அடையாதவர்கள் மட்டுமே தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். புதிய புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சாதாரண அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பலாம். 


புகார்களை எங்கே அனுப்புவது?


புகார்களை கீழ்கண்ட தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மின்னஞ்சல் முகவரி - dochennaicitycentral@indiapost.gov.in


அஞ்சல் அலுவலகம் விவரங்கள்


- தீ.நகர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை-600017.


- மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை-6000104.


- சூலைமேடு அஞ்சல் அலுவலகம், சென்னை- 600094.


- ராயப்பேட்டை அஞ்சல் அலுவலகம், சென்னை- 600014.


- கிரீம்ஸ் ரோடு அஞ்சல் அலுவலகம், சென்னை- 600006.


- தேனாம்பேட்டை அஞ்சல் அலுவலகம், சென்னை- 600018.


- நுங்கம்பாக்கம் மண்டல வளர்ச்சி அலுவலகம், சென்னை- 600034.


- கோபாலபுரம் அஞ்சல் அலுவலகம், சென்னை- 600086.


- திருவல்லிக்கேணி அஞ்சல் அலுவலகம், சென்னை- 600005.


- தீ.நகர் வடக்கு அஞ்சல் அலுவலகம், சென்னை- 600017.


- தீ.நகர் தெற்கு அஞ்சல் அலுவலகம், சென்னை- 600017.


- இந்தி பிரச்சார சபா அஞ்சல் அலுவலகம், சென்னை- 600017.


- மந்தவெளி அஞ்சல் அலுவலகம், சென்னை- 600004.


- விவேகானந்தா கல்லூரி அஞ்சல் அலுவலகம், சென்னை- 600004.


- சாஸ்திரி பவன் அஞ்சல் அலுவலகம், சென்னை- 600006.


- டிபிஐ வளாகம் அஞ்சல் அலுவலகம், சென்னை- 600006.


- தேனாம்பேட்டை மேற்கு அஞ்சல் அலுவலகம், சென்னை- 600006. 


- நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை அஞ்சல் அலுவலகம், சென்னை- 600034.


- லயோலா கல்லூரி, சென்னை-600034


- லாய்ட்ஸ் எஸ்டேட், சென்னை-600014


- முதன்மை கணக்காளர் பொது அஞ்சல் அலுவலகம் சென்னை-600018


- சேப்பாக்கம் அஞ்சல் அலுவலகம், சென்னை- 600004.


- சென்னை பல்கலைக்கழகம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600005.


- பார்த்தசாரதி கோவில் அஞ்சல் அலுவலகம், சென்னை- 600005.


புகார் அனுப்ப வேண்டிய முகவரி


அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர மத்தியக் கோட்டம், சென்னை 600017 என்ற முகவரிக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க - அதிக வருமானம், சிறந்த வட்டி: அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்


மேலும் படிக்க - SSY, PPF, MSSC... தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள்: முழு பட்டியல் இதோ


மேலும் படிக்க - NSC: அசத்தல் சேமிப்புத் திட்டம்.... வட்டியில் மட்டும் 4 லட்சத்துக்கு மேல் கிடைக்கும், முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ