இந்தியாவில் முதன் முறையாக கோவையில் வாட்சப் வாயிலாக புக்கிங் செய்யும் வகையில் ஆட்டோ பயண சேவை திட்டம் தொடங்கப்பட்டது. பெருகி வரும் மக்கள் தொகையில் தற்போது பொதுமக்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் பயணம் செய்வதை அதிகம் விரும்பி வருகின்றனர். இதற்கான செயலிகள் அதிகம் உள்ள நிலையில்,வாட்சப் மூலமாக எளிதாக புக்கிங் செய்து பயணம் செய்யும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஊர் கேப்ஸ் (OOR Cabs) எனும் புதிய பயண சேவை திட்டத்தை கோவையில் அறிமுகம் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓலா, ஊபர் என செயலி மூலம் ஆட்டோ, கேப்களை முன்பதிவு செய்து மக்கள் ஏற்கனவே பயணித்து வருகின்றனர். தற்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செயலியான வாட்ஸ்அப் மூலம் வாகனங்களை புக் செய்யும் வழிமுறை மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. 



இதற்கான துவக்க விழா கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மரிய ஆண்டணி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல் துறை கூடுதல் ஆணையர் மகுடபதி கலந்து கொண்டு சேவையை துவக்கி வைத்தார்.


புதிய பயண சேவை திட்டம் குறித்து ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மரிய ஆண்டணி கூறுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக வாட்சப் செயலி மூலமாக புக்கிங் செய்யும் வகையில் இந்த பயண சேவை திட்டத்தை துவக்கி உள்ளதாகவும், முதல் கட்டமாக ஆட்டோ சேவையை கோவையில் துவக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.



மேலும் படிக்க | ”யாரையும் காப்பாற்ற முயலவில்லை” - கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல்


இதில் அனைத்து வாகனங்களையும் இணைத்து விரைவில் இந்தியா முழுவதும் இந்த சேவை திட்டத்தை தொடர உள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது பெரும்பாலான மக்கள் வாட்சப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் ஊர் கேப்ஸ் வாட்சப்பில் இணைய 8098480980 என்ற வாட்சப் எண்ணுடன் தொடர்புகொண்டு எந்த இடத்திலிந்து வேண்டுமானாலும் இந்த ஆட்டோ பயண சேவையை எளிதாக பெற முடியும் என அவர் தெரிவித்தார்.


முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் கேப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லாரன்ஸ் அடைக்கலம், HTC குளோபல் சர்வீஸ் இயக்குனர் செசில் பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாட்ஸ்அப் மூலம் ஆட்டோ புக்கிங் செய்து பயணம் செய்யும் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நிச்சயமாக அதிக அளவு வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.


மேலும் படிக்க | மூதாட்டியின் கை துண்டாகும் அளவிற்கு கடித்த வெறி நாய்; உசிலம்பட்டியில் நடந்த சோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ