மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு நேதாஜி நகரில் சுற்றித் திரியும் வெறிநாய் அதே பகுதியைச் சேர்ந்த பின்னியக்காள் என்ற மூதாட்டியை வலது கை துண்டாகும் அளவு கொடூரமாக கடித்தது. படுகாயமடைந்த மூதாட்டியை மீட்ட அக்கம் பக்கத்தினர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், பழனிக்குமார், அழகுச்சாமி, காத்தம்மாள் மற்றும் பாண்டியம்மாள் என்ற 5 பேரையும் அடுத்தடுத்து இந்த வெறிநாய் கடித்ததில் சிறு சிறு காயம் ஏற்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த வெறிநாயை பிடித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெறிநாய்க்கடியால் வரும் ‘ரேபீஸ்’ மிகவும் கொடூரமான நோயாகும். எனினும் தகுந்த சிகிச்சை உடனே அளிக்கபட்டு விட்டால் உயிர் பிழைக்கலாம். வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு மேல் இந்த நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குப் பிறகு கூட சில சமயங்களில் அறிகுறிகள் தெரிவதுண்டு.
இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது. இதைத் தொடர்ந்து, காய்ச்சல், வாந்தி ஆகியவை. ராபீஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களால் உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். இவர்களுக்கு உடலில் அதிக வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்று பட்டால் கூட உடல் நடுங்கும். எந்நேரமும் அமைதியின்றிக் காணப்படுவார்கள். மற்றவர்களைத் துரத்தி கடிக்க வருவார்கள். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து உயிரிழப்பார்கள்.
மேலும் படிக்க | பொய் வழக்கை காரணம் காட்டி பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார் பதிவாளர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ