இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் வெளியிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபேஸ்புக் இன்ஸ்டகிராமை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை தொடர்ந்து கொண்டுவந்துகொண்டே வருகிறது. சில நாட்களிலே இன்ஸ்டகிராம் உலகமெங்கும் பிரபலமானது. இதில் முதல் முறையாக ஸ்டோரி என்ற அம்சம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பிலும் கொண்டுவரப்பட்டது. 


அதன்பின் அடுத்தடுத்து புதிய அப்டேட் கொண்டு வந்த இன்ஸ்டாகிராம் தற்போது மற்றொரு புதிய அப்டேட்டை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ.


" இனி இன்ஸ்டாகிராம் செயலியில் அடிக்கடி ஸ்டோரி பதிவிடுவோர் அவற்றின் பின்னணியில் இசையை சேர்க்க முடியும். இந்த வசதியை இன்ஸ்டா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறது." இந்த புதிய அப்டேட்டால் பயனர்கள் மிக எளிமையாக தங்களுக்கு விருப்பமான இசையை ஸ்டோரியில் சேர்த்துக் கொள்ள முடியும். இந்த அப்டேட் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு தளங்களில் தற்சமயம் 51 நாடுகளில் கிடைக்கிறது. தினசரி அடிப்படையில் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.