கல்வெட்டியல், தொல்லியல் பட்டய படிப்பில் இணைய ஒரு வாய்ப்பு!
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2020 சனவரி திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது.
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2020 சனவரி திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது.
இவ்வகுப்பில் தொல்லியல், கல்வெட்டியில், தமிழ் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்துக்கொள்வதற்கு, கல்வெட்டு படித்தல் மற்றும் ஆவணப்படுத்துதலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், இப்பட்டய படிப்பு சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களில் ஓராண்டு காலத்திற்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டய படிப்புகான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டய படிப்பிற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி எனவும், பயிற்சிக்கான சேர்க்கை கட்டணம் ரூ.2500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றபோதிலும் இப்படிப்புக்கு வயது வரம்பு ஒரு தடை அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20, டிசம்பர் 2019 மாலை 5.00 மணிக்குள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து முழு தகவல்களை அறிந்துக்கொள்ள தொலைப்பேசி எண்: 044-22542992, 9500012272 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.