நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சி தலைவரா? நட்டா திறந்த கல்வெட்டில் எழுந்த சர்ச்சை
கல்வெட்டில் ஏற்பட்டுள்ள பிழை விரைவில் திருத்தப்படும் என தெரிவித்துள்ளது. பா.ஜ.கவின் கல்வெட்டு பிழை மீம்ஸ் கன்டென்டாகவும் மாறியுள்ளது.
திருப்பூர்: பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா திருப்பூரில் திறந்த கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சி தலைவர் என குறிபிட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பா.ஜ.க (Bharatiya Janata Party) தேசியத் தலைவர் ஜே.பி நட்டா திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, திருப்பூர் மற்றும் ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.கவின் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்த அவர், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றினார். இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்போது, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா (JB Natta) திருப்பூரில் திறந்து வைத்த கல்வெட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்வெட்டில் பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சி தலைவர் என குறிபிடப்பட்டுள்ளார். ஆளும்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் ஒருவரே எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். மற்ற கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
ALSO READ | முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்: அண்ணாமலை ஆவேசம்
அதன்படி, திமுகவுக்கு (DMK) அடுத்தபடியாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக. அக்கட்சியின் சார்பில் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக உள்ளார். 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.கவின் சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் இருக்கிறார்.
ஆனால், அவரது பெயருக்கு கீழ் பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் என பொறிக்கப்படாமல், எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் தேசிய தலைவர் நட்டா திறந்து வைத்த கல்வெட்டிலேயே இந்த பிழை இருப்பது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று, கண்டனங்களும் எழுந்தன. சிலர், இது கூடவா கல்வெட்டில் பிழையாக பொறிக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள பா.ஜ.க, கல்வெட்டில் ஏற்பட்டுள்ள பிழை விரைவில் திருத்தப்படும் என தெரிவித்துள்ளது. பா.ஜ.கவின் கல்வெட்டு பிழை மீம்ஸ் கன்டென்டாகவும் மாறியுள்ளது.
ALSO READ | தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாத அண்ணாமலைகள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது: வைகோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR