கோயம்பேட்டில் லுலு மால் வருகிறதா? தமிழக அரசு விளக்கம்!
LuLu Mall In Koyambedu: சென்னை கோயம்பேடு மார்க்கெட் இருக்கும் இடத்தில், லுலு மால் வரவுள்ளதாக தகவல்கள் பரவி வந்ததை அடுத்து இது குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
LuLu Mall In Koyambedu: உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள லுலு மால், இந்தியாவில் பல கிளைகளை வைத்துள்ளது. இந்த நிலையில், லுலு மால், தமிழகத்தில் கிளையை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக அரசின் ஃபேக்ட் செக் துறை இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு..
வதந்தி:
கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தைக் காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தரப்போவதாகப் பலரும் வதந்தி பரப்புகின்றனர்.
மேலும் படிக்க | ரஜினிகாந்த், கமல், விஜய்யிடம் ஆதரவு கேட்போம்-வானதி சீனிவாசன் பேட்டி!
உண்மை என்ன?
அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வீட்டுவசதித்துறைச் செயலாளர் திரு. சமயமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள், "மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயலாகும்.
லுலு மால் என்றால் என்ன?
பல சந்தைகள், கடைகள், தியேட்டர்களை அடக்கியதுதான் லுலு மால். இதன் தலைமையகம், அபுதாபியில் உள்ளது. இதனை, 2000ஆம் ஆண்டு எம்.ஏ.யூசுஃப் என்பவர் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சூப்பர் மார்கெட்டாக இருந்த இது, பின்னாளில் பெரிய மாலாக உருவானது. தற்போது இதில், மொத்தம் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஊழியர்களாக இருக்கின்றர். இந்த மால், 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்களது முதல் கிளையை கேரளாவில் தொடங்கியது. கடந்த 2022ஆம் ஆண்டு, இந்த மாலின் தமிழ்நாட்டின் முதல் கிளை, கோயம்பத்தூரில் தொடங்கப்பட்டது.
பெங்களூரு, சென்னை, புவனேஷ்வர், ஐதராபாத், லக்னோ, காலிகட், திருவேண்ட்ரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த மால் இன்னும் சில கிளைகளையும் தொடங்க உள்ளது. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த மாலிற்குள் நுழைந்தால் எது தேடினாலும் கிடைக்கும் என்பதுதான்.
மேலும் படிக்க | ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய செயலி அறிமுகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ