பிஎஸ்என்எல்-க்கும் ஈஷா மையத்துக்கும் தொலைபேசி பில் தொடர்பாக நடந்துவரும் வழக்கின் புதிய விசாரணையிலும் நீதி நிலை நிறுத்தப்படும் என ஈஷா நம்பிக்கை தெரிவித்துள்ளது. டிசம்பர் 2018 - ஜனவரி 2019 காலத்தில் வெறும் 25 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ 2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் தவறாக பில் அனுப்பி இருந்தது. ஈஷா யோகா மையத்தின் மாத உச்ச வரம்பே (Credit limit) வெறும் ரூ.66,900 ஆக இருக்கும் நிலையில் இந்த கட்டண விதிப்பு தவறானது என பி.எஸ்.என்.எல் இடம் ஈஷா முறையிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன்பு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஈஷா யோகா மையத்தின் மாதந்திர தொலைபேசி கட்டணம் வெறும் ரூ.22,000-க்கும் குறைவாகவே இருந்துள்ளது.


 ஆனால், மேற்குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என பி.எஸ்.என்.எல் அச்சுறுத்தியதால், ஈஷா யோகா மையம் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  



மேலும் படிக்க | மக்கள் பிரச்னைகளையா ரஜினி பேசினார்?... கேள்வி எழுப்பும் அழகிரி 


இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி திரு. பத்மநாபன் அவர்களை தனி நபர் ஆர்பிட்ரேட்டராக நியமித்து இதனை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


 விசாரணையின் முடிவில் பி.எஸ்.என்.எல்லின் வாதத்தை ஏற்க மறுத்த ஆர்பிட்ரேட்டர் திரு.பத்மநாதன் அவர்கள், டிசம்பர் 2018 - ஜனவரி 2019 ஆகிய இரண்டு மாதங்களுக்கு சராசரி மாத கட்டணமாக தலா ரூ.22,000 செலுத்த உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.எஸ்.என்.எல் மேல் முறையீடு செய்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய விசாரணையிலும் மீண்டும் நீதி நிலை நிறுத்தப்படும் என ஈஷா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி - பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ