மக்கள் பிரச்னைகளையா ரஜினி பேசினார்?... கேள்வி எழுப்பும் அழகிரி

ஆளுநர் ரவியிடம் ரஜினிகாந்த் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசினாரா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 9, 2022, 06:54 PM IST
  • ஆளுநர் ரவியை நேற்று ரஜினி சந்தித்தார்
  • அந்தச் சந்திப்பில் அரசியல் குறித்து பேசப்பட்டது
  • அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்
மக்கள் பிரச்னைகளையா ரஜினி பேசினார்?... கேள்வி எழுப்பும் அழகிரி title=

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசியதாகவும் ஆனால் அதுதொடர்பாக வெளியில் சொல்ல முடியாது எனவும் கூறினார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு பிறகு, மாநிலத்தின் ஆளுநருடன் எப்படி ஒருவர் அரசியல் பேசலாம் என பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழக செயல்களில் கவர்னர் தலையிட்டு அரசியல் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மாநாட்டை நடத்துவது நல்ல முடிவு. இந்த மாநாட்டில் சில நடைமுறைகளை உருவாக்க வேண்டும். கவர்னர் தேவையில்லாமல் பல்கலைக்கழகங்களில் தலையிடுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். நடிகர் ரஜினி கவர்னரை சந்தித்து பேசியது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் தமிழக மக்களுக்கு கவர்னர் நிறைய செய்ய விரும்புகிறார் என்று கூறி இருக்கிறார். அதில் மகிழ்ச்சி.

Rajini, Ravi

தமிழக மக்கள் இப்போது விரும்புவதும், எதிர்பார்ப்பதும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். எல்லா கட்சிகளும் இதை வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து 6 சதவீத வரிவசூல் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க | குற்ற வழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை: உயர் நீதிமன்றம் வேதனை

ஆனால் திட்டங்கள் மூலம் திருப்பி கிடைப்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே இதையும் அதிகரிக்க வேண்டும். இந்த விஷயங்கள் பற்றி கவர்னரிடம் ரஜினி பேசி இருக்க வேண்டும். பேசி இருப்பார் என்று நம்பிக்கை உள்ளது. இது பற்றிய தகவலையும் ரஜினி வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

மேலும் படிக்க | எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் இலங்கை கடல் தொழிலாளர்கள்; இந்தியா உதவ வேண்டும் என கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News