தமிழநாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மட்டுமன்றி, திருவண்ணாமலையிலும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களும் பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. அவருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காரணம் என்ன? 


திமுக அமைச்சர்கள் பலருக்கு சொந்தமான மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. வரி எய்பு புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த சோதனை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. 


எந்தெந்த இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது?


தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பதவி வகித்து வருப்பவர் எ.வ.வேலு. இவர் நடத்தி வரும் நிறுவனங்கள்,மருத்துவமனைகள், கல்லூரிகளில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் இன்று காலை முதல் தமிழகத்தின் சென்னை,திருவண்ணாமலை பல்வேறு மாவட்டங்களில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் அவரது வீடு, அருணை பொருளியல் கல்லூரி, அருளை மருத்துவக் கல்லூரி மற்றும் அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மட்டுமன்றி அவரது சகோதரர், மகன், மகள் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களிலும் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.


அதேபோல் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள்,பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள், வீடுகள் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் முழுக்க முழுக்க அமைச்சர் எ.வ. வேலுக்கு தொடர்புடைய நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில்தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் பேசலாம்-செஞ்சி மஸ்தான்


இதற்கு முன்னரே சோதனை:


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போது எ.வ,வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


திமுக அமைச்சர்களை குறி வைக்கும் அமலாக்கத்துறை-வருமான வரித்துறை?


திமுக கட்சியில் இருக்கும் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகிய அமைச்சர்களின் வீட்டில் சோதனை நடைப்பெற்றதை தொடர்ந்து தற்போது அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டிலும் சோதனை நடைப்பெற்று வருகிறது. இதனால், திமுக கட்சியையும் அக்கட்சியில் உள்ள தமிழக அமைச்சர்களையும் அமலாக்கத்துறையினரும் வருமான வரித்துறையினரும் குறி வைத்து தாக்குவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | “திமுக தங்கள் மீதான தவறை மறைக்க ஆளுநர் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது”


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ