புத்தாண்டை வரவேற்ற தச்சாங்குறிச்சி ஜல்லிக்கட்டு! ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு
First Vadivasal Opened For 2023: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தச்சங்குறிச்சியில் தொடங்கியது! வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்த காட்சிகள் வைரல்
தச்சங்குறிச்சி: தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறும் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கின. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கியது, 800 காளைகளை அடக்க, 300 காளையர்கள் பங்கேற்கும் போட்டியைக் காண, ஜல்லிக்கட்டு ரசிகர்களும் மக்களும் பெருமளவில் கூடியுள்ளனர். வாடிவாசலில் சீறிபாயும் காளைகளும், காளையை அடக்கும் வீரக் காளையர்களும் களத்தில் இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியை, தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் என பலரும் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோலாகலமாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க | செவிலியர்கள் பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை - மா. சுப்பிரமணியன்
ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதிக்கு, அப்பகுதியில் உள்ள கோயில் காளைகள் மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டன. நிகழ்ச்சியின் தொடக்கமாக, அந்த பகுதியில் உள்ள தேவாலயத்தின் அருட்தந்தை ஜெபம் செய்து கோயில் காளையை அவிழ்த்து விட்டதும் போட்டிகள் தொடங்கின.
தச்சங்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 2ம் தேதி போட்டி நடத்த, அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.
இருப்பினும், ஏற்பாடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டி தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்தி வைத்தனர்.
அதன்பிறகு, ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நடத்துவதற்குக தமிழக அரசு ஒப்புக் கொண்ட நிலையில், விழாக் குழுவினரும் உற்சாகத்துடன் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினார்கள்.
ஆனால், அப்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்றும் மாற்று தேதியில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ள அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதால் அனைவருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது. மக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிறகு, அதிகாரிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சரிசெய்யப்பட்டு, இன்று (ஜனவர் 8) ஜல்லிக்கட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் தச்சாங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவே, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜல்லிக்கட்டை ஒத்தி வைத்த தச்சங்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு கறார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ