தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு #COVID19 பரிசோதனை
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு (TN Govt) அனுமதி அளித்திருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கொரோனா இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது..
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு (TN Govt) அனுமதி அளித்திருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கொரோனா இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது..
தமிழக அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்களின்படி, இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை நடைபெற்றது.
மேலும் பார்வையாளர்களாக பங்கேற்பவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு (Jallikattu) நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜல்லிக்காட்டும், பிற இடங்களில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
ஆனால், கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பால் இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்து, அதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
Also Read | ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி; கட்டுபாடுகள் என்னென்ன?
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் 300 நபர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.
எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.
Also Read | ஜல்லி கட்டு காளைகள் கொரோனா தடையை தகர்த்தெரியுமா..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR