ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 30-ம் தேதி துவங்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டதால், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் வகையில், கடந்த ஜனவரி 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.


இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆகஸ்ட் 30-ம் தேதி இறுதி விசாரணை துவங்கும் என அறிவித்தனர். மேலும், இந்த வழக்கில் மத்திய மற்றும் தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.