சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை நீடித்தது. அதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இரு வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீசில் கையெழுத்திட வேண்டும் என்றும் அதன் பின்னர் திங்கட்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.இதன்படி ஜாமீனில் வெளிவந்த ஜெயக்குமார் வாரந்தோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் ஆஜராகி ஜெயக்குமார் வாரந்தோறும் ஆஜரானாலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி, நிபந்தனைகளை தளர்த்த கடும் ஆட்சேபனை  தெரிவித்தார்.


மேலும் படிக்க | புதுக்கோட்டை: காதலை கைவிட மறுத்த மகள் - உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற தாய்!


அப்போது ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி திருச்சியிலும், சென்னையிலும் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றுவதாகவும் அவரது மருமகன் தொடர்பான விவகாரத்தில் அவரிடம் விசாரிக்க வேண்டியது ஒன்றும் இல்லை என்றும் வாதிட்டார். பின்னர் நீதிபதி காவல்துறை முன்பு ஆஜராக செல்லும்போது 200 பேருடன் செல்வதை செய்திகளில் பார்ப்பதாகவும் அவ்வாறு செல்வது ஏன் என கேள்வி எழுப்பி விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டதுடன் வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டுமென நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | NO Third Language: இந்திக்கு நஹி சொன்ன தமிழகம் இருமொழிக் கொள்கையே தொடரும்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR