அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பதவியேற்ற பிறகு அக்கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டுவருகிறது. ஒருபுறம் ஓபிஎஸ்ஸையும் அவரது ஆதரவாளர்களையும் இபிஎஸ் நீக்க, மறுபுறம் இபிஎஸ்ஸையு அவரது ஆதரவாளர்களையும் ஓபிஎஸ் நீக்குகிறார். இதனால் அக்கட்சித் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். சூழல் இப்படி இருக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் வகையில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான ஆலோசனையை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் சென்னையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பங்கேற்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதற்கிடையே இரண்டு அணிகளாக செயல்படும் அதிமுகவிலிருந்து யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாக, உடனடியாக ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் தங்கள் தரப்பு பிரதிநிதியாக கோவை செல்வராஜ் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



அதேசமயம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என இபிஎஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது. நிலைமை இப்படி இருக்க இன்று நடந்த கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, கோவை செல்வராஜ் (ஓபிஎஸ் தரப்பு) முன்னதாகவே வந்து அதிமுகவுக்கென்று போடப்பட்டிருந்த மூன்று இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேராக அதிமுக பெயர் பலகை இருந்தது.


மேலும் படிக்க | மகனின் படுகொலைக்கு நீதி கேட்ட தாய்க்கு 100 கசையடி; நீதிமன்றம் வழங்கிய கொடூர தீர்ப்பு


செல்வராஜுக்கு அடுத்ததாக வந்த ஜெயக்குமாரும், ஜெயராமனும் மீதம் இருக்கும் இரண்டு இருக்கைகளில் அமர்ந்தனர். அப்போது, செல்வராஜுக்கு நேராக அதிமுக பெயர் பலகை இருந்ததை கவனித்த ஜெயக்குமார், அந்தப் பலகையை தன் இருக்கைக்கு நேராக வைத்துக்கொண்டார். இதைப் பார்த்த செல்வராஜ் எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. ஜெயக்குமார் திடீரென பெயர் பலகையை தனக்கு நேராக வைத்துக்கொண்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.



கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “அதிமுக சார்பில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். அதிமுக என்றால் நாங்கள்தான். அதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க” என்றார்.


மேலும் படிக்க | LPG Price Today 1 August 2022: கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ