‘சாவர்க்கர் தேவையில்லை, பெரியாரை கொண்டாடுங்கள்’ - ஜிக்னேஷ் மேவானி பேச்சு
குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் ; அது ஆபத்து - ஜிக்னேஷ் மேவானி
‘தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் ; அதன் கொடுமை எங்களுக்கு நன்றாக தெரியும்’ என்று குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
பொதுவாக, குஜராத் மாடல் என்ற ஒற்றைப் பெயரைக் கொண்டு நரேந்திர மோடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் ஆனார். அதில் இருந்து குஜராத் மாடல் என்ற பெயரை பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவினர் பயன்படுத்தியும், பெருமையாக உச்சரித்தும் வருகின்றனர்.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தங்களது ஆட்சியை ‘திராவிட மாடல்’ என்று கூறி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ‘திராவிட மாடல்’ என்று ஒருபுறமும், தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜகவினர் ’குஜராத் மாடல்’ என்று மறுபுறமும் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தில் இருந்து வந்த எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, இரு மாடல்கள் குறித்தும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக ‘தலித் உண்மைகள்’ என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை, குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி பேசியதாவது, ‘ஒரு தலித் இல்லாத சாதியினர் தீண்டாமையை பின்பற்றும் போது அவர்களின் கஷ்டம் தெரியும். மதம் மற்றும் சாதி ஆகியவை ஒன்றிணைந்த ஒன்று. அதை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செயல்படுகிறது. அவர்களை வர விடாதீர்கள. தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள். அதன் கொடுமை எங்களுக்கு நன்றாக தெரியும். பாஜக மற்றும் ஆர்.எஸ். எஸ் இயக்கம் முழு சர்வாதிகார இயக்கம். அந்த இயக்கங்களிடம் இருந்து தலித் மக்களை காப்பதற்கு நாம் அனைத்தையும் செய்ய வேண்டும். அதனால், தமிழகத்திற்கு சாவர்க்கர் தேவையில்லை ; பெரியாரைக் கொண்டாடுங்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்: தடை நீக்கி உத்தரவு!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR