அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளை சமாளிக்க JIPMER மற்றும் IGMCRI-ல் ஆய்வகங்களின் திறனை அதிகரிக்கும் முயற்சியில் புதுவை முதல்வர் இறங்கியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், JIPMER,  இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் (IGMCRI) உள்ள இரண்டு ஆய்வகங்களின் திறனையும் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


ALSO READ | புதுவையில் அரசு பேருந்து ஓட்டுநர் உள்பட 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று...


இந்த இரண்டு ஆய்வகங்களும் ஒரு நாளைக்கு 300 மாதிரிகளை சோதிக்கும் திறன் கொண்டவை, ஆனால் இங்கு செய்யப்டும் உண்மையான சோதனை மிகவும் குறைவு என தகவல்கள் தெரிவிக்கிறது.


IGMCRI-ல், ஒரு நாளைக்கு சராசரியாக 90 முதல் 100 மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. இதேபோல், JIPMER-ல் அதை விட குறைவான மாதிரிகளை சோதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு ஆய்வகங்களும் இனி அதிக மாதிரிகளை சோதிக்க பயன்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


தேசிய ஊரக சுகாதார மிஷன் (NRHM) கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நாராயணசாமி, COVID-19 நிலைமையைச் சமாளிக்க மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கூட்டப்படுவர் எனவும், ANM, ASHA, ANM மற்றும் NRHM-ன் சுகாதார ஊழியர்களின் ஊதியத்தை சரியான முறையில் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


யூனியன் பிரதேசத்தில் மேலும் COVID-19 பராவாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மடகடிபட்டையின் கன்னியாகோயில் ஞாயிற்றுக்கிழமை சந்தை மற்றும் பிற வார சந்தைகள் அனுமதிக்கப்படாது என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வணிகம் செய்யும் போது சமூக இடைவெளியை பராமரிப்பது இந்த சந்தைகளில் கடினம் என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து அந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதனிடையே காவல் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 900 எண்ணிக்கையிலான காலியிடங்களை நிரப்புமாறு மற்ற துறைகளின் அதிகாரிகளையும் முதல்வர் இதன்போது கேட்டுக்கொண்டார்.


ALSO READ | அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் 2000 ரூபாய் -புதுவை முதல்வர் உறுதி!
எல்லைகள் இறுக்கப்பட்டிருந்தாலும், மக்கள் விவேகத்துடன் நுழைகிறார்கள் என்று நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் வசிப்பவர்கள் சென்னை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இருந்து வருபவர்கள் நிச்சையம் சோதிக்கப்பட வேண்டும் எனவும், கட்டயாம் 14 நாட்களை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.