சவுக்கு சங்கரின் டிவிட்டர் முடக்கம்! பின்னணியில் தமிழக காவல்துறை?
பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கபட்டுள்ளது.
ஆளும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து இணையத்தின் வாயிலாகவும் ட்விட்டர் வாயிலாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருபவர் சவுக்கு சங்கர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளில் ஊழல்கள் மற்றும் விதிமீறல்கள் போன்றவற்றை பற்றி பொதுவெளியில் கூறி வருகிறார். இதனாலேயே இவர் மீது பல அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். சமீபத்தில் தனியார் பத்திரிக்கை மீது கொடுக்கப்பட்ட புகாரில் மோசடி செய்ததாக இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது.
மேலும் படிக்க | EPS க்கு பொதுச்செயலாளர் பதவி - நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள்!
ஜி ஸ்கொயர் என்னும் கட்டுமான நிறுவனம் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கரின் பெயரும் இடம்பெற்று இருந்தது. பின்பு தனியார் பத்திரிகை பெயர் நீக்கப்பட்ட போதிலும் இவரது பெயர் நீக்கப்படவில்லை. சிறிது நாட்களுக்கு முன்னர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் இவர் மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் தமிழக காவல் துறை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ட்விட்டரில் ஆர்டலி முறை பற்றி அதிகமாக பேசி வந்தார் சவுக்கு சங்கர். ஆர்டலிகளை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றமும் அரசு அதிகாரிகளை கண்டித்து இருந்தது. மேலும் அரசு அதிகாரிகள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அரசு வாகனங்களை பயன்படுத்தி வருவதையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதனால் கோபமடைந்த அரசு அதிகாரிகள் சவுக்கு சங்கரை ஏதாவது செய்ய வேண்டும் என்று காவல்துறையை நாடியுள்ளனர். இதனால் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தை காவல்துறை முடக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் மீது கைது நடவடிக்கையும் பாய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கைதாகிறாரா சவுக்கு சங்கர்? போலீஸில் பெண் பத்திரிகையாளர் புகார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR