அரைவேக்காடு அண்ணாமலை - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
K.balakrishnan comment on Annamalai Tweet : பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்கு அண்ணாமலை வெட்கப்படுவதாக அறிவிப்பு. அதற்கு கே.பாலகிருஷ்ணன் அடித்த கமெண்ட் என்ன தெரியுமா ?
பிரதமர் மோடி, தமிழ்நாடு வருகிறார் என்றாலே அதகளம்தான். அரசியல் களமே படு சுறுசுறுப்பாக இயங்கும். பிரதமர் வருவதற்கு முன்பும், அன்றைய நாள் அலப்பறைகளும், அவர் சென்ற பின் நடக்கும் ரியாக்ஷன்கள் என தமிழக அரசியல் இந்த முறையும் களைகட்டியுள்ளது. பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக நேற்று சென்னை வந்த பிரதமர், நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்றார். அவரை மேடையில் அமரவைத்தபடி, தமிழ்நாட்டின் 5 முக்கியமான கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.
மேலும் படிக்க | கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் - அரசிடம் வாள் சுழற்றும் கூட்டணி கட்சி
இந்த உரைக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு அரசியல் விமர்சகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் அண்ணாமலைக்கு பதில் அளித்து வருகின்றனர். அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலையின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ளார்.
அதில், ‘பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நியாமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். மாறாக மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல. தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது வாய்ஜாலம் காட்டும் பிரதமர், சம உரிமைக்கான கோரிக்கை பற்றிக் கூட எதுவும் பேசவில்லை.
அண்ணாமலைக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை உண்டா?. முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிரைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஆனால், அதை மறைத்து - தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது.!’ என்று விமர்சித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR