AICTE-ஐ பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, இந்த ஆண்டும் பழைய கட்டணம்தான்: அமைச்சர் பொன்முடி

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு புதிதாக 10 பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 27, 2022, 04:06 PM IST
  • பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்வதற்காக இணையவழி பதிவு 1.7.2022 அன்று தொடங்கப்பட உள்ளது: க.பொன்முடி
  • பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆசிரியர்களை அழைத்து, ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட உள்ளம்: க.பொன்முடி
  • AICTE சொல்லி இருந்தாலும் கூட தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு வசூலித்த அதே பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும்: க.பொன்முடி
AICTE-ஐ பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, இந்த ஆண்டும் பழைய கட்டணம்தான்: அமைச்சர் பொன்முடி title=

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு வசூலித்த பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்வதற்காக இணையவழி பதிவு 1.7.2022 அன்று தொடங்கப்பட உள்ளது. 

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு 2-ம் ஆண்டு சேரும் மாணவர்களுக்குமான அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு புதிதாக 10 பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

மதுரை, நாகர்கோவில், சென்னை, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், தூத்துக்குடி, ஊத்தங்கரை, ஈவேரா அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிய பிரிவுகள் செயல்படுத்தப்பட உள்ளன.

தளவாட தொழில்நுட்பம், இயந்திரவியல் கணினி வடிவமைத்தல், இயந்திர மின்னணுவியல் போன்ற புதிய பாடப்பிரிவுகள் 13 பல்வகை கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.

மேலும் படிக்க | தலித் சாமியாரின் எச்சில் உணவை வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ 

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆசிரியர்களை அழைத்து, எப்படி நடத்துவது என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட உள்ளம்.

2010 -ல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் இருப்பது உண்மை. தமிழ்நாடு கல்வி கொள்கை முறையில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை உருவாக்க முதலமைச்சர் குழுவினை அமைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கைக்கு அவசியமில்லை.

கல்வி மாநிலப் பட்டியலில் வந்தால் பல பிரச்சனைகள் தீரும். தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. CUET தேர்வை மத்திய பல்கலைக்கழகங்களில் சில பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. வெளிநாடுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வைத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பாஜகவினர் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழன் என்பதும் பிற மாநிலங்களுக்கு சென்றால் அந்தந்த மாநிலங்களுக்கு தகுந்தார் போல பேசிக் கொள்கின்றனர்.

பிரதமர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதில் எந்த தவறுமில்லை. தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும், நமக்குரிய தேவைகளையும், கூட்டாட்சி முறையில் பிரதமரிடம் மாநிலத்தின் முதல்வராக அவர் வைக்க வேண்டிய கோரிக்கைகளை வைத்ததில் எந்த தவறும் இல்லை.

தமிழக முதல்வரை குறை சொல்வதென்பது அவர்களது கட்சி வழக்கம் என்பதைத் தவிர, தமிழகத்தையும் வளர்க்க வேண்டிய எண்ணம் பாஜக-வுக்கு இல்லை.

AICTE சொல்லி இருந்தாலும் கூட தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு வசூலித்த அதே பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும். AICTE சொல்வதை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. புதிய கல்விக் கொள்கையை அதிதீவிரமாக எதிர்க்கிறோம். பொறியியல் கலந்தாய்வில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தவறுகள் ஒன்று கூட நடைபெறாத அளவிற்கு களையப்படும்", என்றார்.

மேலும் படிக்க | கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News