Kalaimamani Awards 2021: தமிழகத்தில், கலைத் துறைக்கு வழங்கப்படும் அனைத்து விருதுகளிலும், கலைமாமணி விருதுகள் மதிப்புமிக்க, கௌரவமிக்க விருதுகளாகும். கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசாங்கத்தால் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு விருது பெற்றவர்களின் பட்டியல் பிப்ரவரி 19, 2021 அன்று வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல திறமையான நடிகர்கள் மற்றும் கௌதம் மேனன் போன்ற பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு கலைமாமணி விருதுகளுக்காக (Kalaimamani Awards) தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாண்டு கலைமாமணி விருது பெறுபவர்களின் பெயர்களை கீழே காணலாம்.


கலைமாமணி விருது பெறுபவர்களின் பட்டியல்


கலைமாமணி விருது பெறும் நடிகர்கள் / நடிகைகள்


ராமராஜன்


சிவகார்த்திகேயன்


யோகி பாபு


சரோஜா தேவி


சௌகார் ஜானகி


சங்கீதா


ஐஸ்வர்யா ராஜேஷ்


தேவதர்ஷினி மற்றும்


மதுமிதா


கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள்


டி இமான்


தீனா


சுஜாதா


ஆனந்த்


கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள்


கலைப்புலி எஸ் தானு


இஷ்ரி கணேஷ்


கலைமாமணி விருது பெறும் இயக்குநர்கள்


கௌதம் மேனன்


லியாகத் அலிகான்


மனோஜ் குமார்


ரவி மரியா


ALSO READ: 'ருத்ர தாண்டவம்' படத்தில் வில்லனாக நடிக்கும் Director கௌதம் மேனன்


கலைமாமணி விருது பெறும் தொலைக்காட்சி நடிகர்கள் / நடிகைகள்


நந்தகுமார்


சாந்தி வில்லியம்ஸ்


நித்யா


கலைமாமணி விருது பெறும் வசனகர்த்தா


வி.பிரபாகர்


கலைமாமணி விருது பெறும் ஒளிப்பதிவாளர்


ரகுநாத ரெட்டி


கலைமாமணி விருது பெறும் எடிட்டர்


ஆண்டனி


கலைமாமணி விருது பெறும் நடனக் கலைஞர்கள்


மாஸ்டர் சிவசங்கர், மாஸ்டர் ஸ்ரீதர்


கலைமாமணி விருது பெறும் ஸ்டண்ட் இயக்குனர்கள்


ஜாகுவார் தங்கம் மற்றும் தினேஷ்


கலைமாமணி விருது பெறும் பாடலாசிரியர்கள்


காமகோடியன் மற்றும் கஹல்மதி


கலைமாமனி விருதுகளை தமிழ்நாடு (Tamil Nadu) இயல் இசை நாடக மன்றம் வழங்குகிறது. தமிழக இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராக நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். திரைப்பட இசை இயக்குனர் தேவா இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.


ALSO READ: நடிகர் அஜித்தின் சங்கடமும் ரசிகர்களின் குமுறலும்… இதில் முதலமைச்சருக்கு என்ன சம்பந்தம்?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR