கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பள்ளித் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமின் கேட்டு, தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11.00 மணிக்கு, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நான்காவது முறையாக, இந்த ஜாமின் மனு மீதான விசாரணை தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, மாணவி மர்ம மரணம் குறித்து, சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த எப்ஐஆர் அறிக்கை மற்றும் சிபிசிஐடி போலீசார் இதுவரை மேற்கொண்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவை அளிக்கப்பட்டது. இதன் மீதான விசாரணையை மதியம் 12:30 மணி வரை விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜாமின் மனு மீதான விசாரணை மதியம் 12.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் மீதான விசாரணை முடிந்து இறுதி உத்தரவு இன்று மாலை வழங்கப்படும் என நேரம் குறிப்பிடாமல் விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி அறிவித்தார்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி வீடியோக்களை வலைதளத்தில் பதிவிட்டால் நடவடிக்கை


ஜாமின் மனு மீதான விசாரணை மதியம் 3-30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது, ஜிப்மர் மருத்துவக் குழுவினரின் மறு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள, மாணவியின் இரண்டு உடல் கூறாய்வு மருத்துவ அறிக்கை வந்த பின்புதான் எப்ஐஆர் நகலை எங்களால் சமர்ப்பிக்க முடியும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 5 நபர்களின் ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளுபடி செய்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.


பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டதால் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற பெரும் வன்முறை சம்பவத்தில், பள்ளி அடுத்து நொறுக்கப்பட்டு பள்ளியில் உள்ள உடைமைகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதோடு பள்ளி மாணவர்களின் சான் றிதழ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் தீ வைக்கபப்ட்டது. இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியது. இதனை அடுத்து, கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவர்களுடைய அனைத்து சான்றிதழ்களையும் மீண்டும் வழங்க அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது. அரசின் அறிவிப்பை அடுத்து, 2000 மாணவ மாணவிகள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.


மேலும் படிக்க | சிதைக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியை சீரமைத்து வகுப்புகள் தொடங்குவது எப்போது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ