கள்ளக்குறிச்சி: சிதைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளியை சீரமைத்து வகுப்புகள் தொடங்குவது எப்போது? என்று பள்ளியில் படித்து வரும் மாணவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் எழுப்பும் கவலை நிறைந்த கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பதிலளித்துள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் சக்தி இண்டர்னேஷல் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியை விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்திருக்கிறார். கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் +2ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவர் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்ட நிலையில், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாய் சந்தேகம் கிளப்பினார். மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என புகார் சொன்னதை அடுத்து, மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் திடீரென கலவரமாக மாறியது.
கள்ளக்குறிச்சி கலவரத்தில் தனியார் பள்ளியில் இருந்த வாகனங்கள், பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது. இதனால் பள்ளி கட்டிடம் முழுவதும் பெரும் சேதமடைந்தது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகள்
இதனால் அந்த பள்ளியில் படித்து வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி தொடர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடனான கருத்துக் கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் தலைமையில் நடைப்பெற்ற இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர்களை, அருகில் உள்ள மற்ற தனியார் பள்ளிகளிலோ அல்லது அரசு பள்ளிகளிலோ சேர்த்து படிக்க வைக்க விரும்பினால் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம்: அதிகாரிகளை தடாலடியாக மாற்றிய தமிழக அரசு
அப்போது கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க விருப்பம் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சீரமைத்து வரும் ஆக்ஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின விழாவை பள்ளியில் கொண்டாடும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் உறுதியளித்தார்.
மேலும் தனியார் பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் எரிந்துவிட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் உறுதியளித்தார்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ