கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள குப்பத்து மேடு கிராமத்தில் வசிப்பவர் செல்வநாதன்.  கடந்த இரண்டு மாதங்களாக இவர் தனியாகவே வசித்து வருகிறார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவரது வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரது கை மற்றும் கால்களை கட்டி போட்டு வீட்டில் இருந்த 90 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்: அச்சத்தில் மக்கள்!


மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தெரியக்கூடாது என்பதற்காக அங்கிருந்த வயர்களையும் துண்டித்து விட்டு சென்றுள்ளனர். செல்வநாதனின் மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருப்பதால் இவர் தனியாக வசித்து வந்தார். கொள்ளையர்கள் செல்லும்போது, வீட்டில் இருந்த பணம் மற்றும் அனைத்து நகைகளையும் எடுத்துச் செல்கிறீர்களே என செல்வநாதன் கூறியதை அடுத்து கொள்ளையர்கள் ஒரு  மோதிரம் மற்றும் 1000 ரூபாய் பணத்தை செலவிற்காக கொடுத்துச் சென்றுள்ளனர். 


ALSO READ | ஆண்டவனே இல்ல : கதறி அழுத ஜிபி முத்து!


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தடவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொள்ளையர்களில் சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR