Kanchipuram Youth Destroyed Benz Car: காதலுக்கு கண்கள் இல்லை என்ற பழமொழியை பலரும் கடந்து வந்திருப்பீர்கள். அதேபோல், காதல் தோல்வியின் சோகத்தையும் கேள்விப்பட்டிருப்பீர்கள், அனுபவித்திருப்பீர்கள். காதல் தோல்வி என்றால் தாடி வளர்ப்பதும், கண்ணீர் விடுவதாகவும் தேவதாஸ் காலத்தில் இருந்து தேவரகொண்ட காலம் வரை அதே தான் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், காதலிக்கும் போது ஜோடிகளுக்குள் சண்டை வந்தால் அருகில் இருக்கும் சிலவற்றை தூக்கி வீசுவதும், போட்டு உடைப்பதும் சில நேரங்களில் அரங்கேறும். ஆனால், அவை அனைத்தும் அந்த நொடியின் அழுத்துமாகவே இருக்கும். அப்படியிருக்க, காஞ்சிபுரம் அருகே தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு இளம் மருத்துவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியிலுள்ள குலைக்கரை அருகே ரூ. 70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் கார் ஒன்று  தீயில் எரிந்துள்ளது. இதைக்கண்ட  அப்பகுதி மக்கள் தீயணைப்புப் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! ஆன்லைன் மூலம் பிரசாதம்


சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து காஞ்சி தாலுக்கா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த கார், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவின்(28) என்பவருடையது என்பது தெரியவந்தது.


மேலும் கவின் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று கடந்தாண்டு படிப்பை நிறைவு செய்துள்ளார். அவருக்கு அதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


இந்தநிலையில்தான், காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் தனது  காதலியுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவின் ஆத்திரமடைந்துள்ளார். அதன் உச்சமாக,  தனக்கு சொந்தமான ரூ. 70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காஞ்சி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இளம் காதல் ஜோடிகள் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென காதலனுக்கும், காதலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடில் ஆத்திரமடைந்த காதலன் தனது  ரூ. 70 லட்சம் மதிப்பிலான  சொந்த பென்ஸ் காரையே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | மோடி பிபிசி ஆவணப்படம்: மொபைலில் பார்த்த பெண் கவுன்சிலர் - டக்கென பிடித்த போலீசார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ